Categories
தேசிய செய்திகள்

கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு….. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம் உயர்த்திள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி செலுத்த நேரிடும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால், இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் மாற்றியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கிகள் கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. அதன்படி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி குறைந்தபட்ச வட்டியை 7.95% ஆகவும், கனரா வங்கி 8.30% ஆகவும் உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ கட்டணம் உயரும்.

Categories

Tech |