டிஜிட்டல் வங்கிக்கடன் பெறுவதை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. நிதியைப் பெறுவது எளிதாக இருந்தாலும், அதனை திருப்பி செலுத்துவது உங்கள் முன்னுரிமையாக இருத்தல் வேண்டும். EMI-களை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது, உங்கள் நிதி ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். அவ்வாறு EMI-களை தாமதப்படுத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி இங்கே காணலாம்.
அபராதக் கட்டணம்
ஒரு மாதத்துக்கும் மேலாக EMI-ஐ தாமதப்படுத்தினால் வங்கிகள் நிர்ணயித்துள்ள அளவின்படி குறைந்தபட்சம் (அல்லது) அதிபட்சம் அபராதமாக 1 சதவீதம் -2 சதவீதம் வரையிலும் அபராத கட்டணமாக விதிக்கப்படும். EMI தாமதமாகும் போது வங்கிகள் சாதாரண வட்டிக்கும் கூடுதலாகவே அபராத தொகையை வசூலிக்கலாம்.
அக்கவுண்ட்டை செயல்படாத சொத்தாக வகைப்படுத்துதல்
வங்கிகள் EMI இயல்பு நிலையை 2 வகைகளாக வகைப்படுத்துகிறது. அதாவது சிறிய இயல்பு நிலை மற்றும் பெரிய இயல்பு நிலை ஆகும். 90 நாட்கள் வரையில் EMI தாமதமாவது சிறிய இயல்புநிலை வகையின் கீழ் வரும், அதே நேரம் 3 தொடர்ச்சியான EMI பேமெண்ட்டுகளைத் தவறவிடுவது ஒரு பெரிய இயல்பு நிலையாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 90 நாட்களுக்கு அசல் (அல்லது) வட்டி செலுத்தப்படா விட்டால் வங்கி உங்கள் கடனைச் செயல்படாத சொத்தாக (NPA) கருதி, உங்களுக்கு எதிராக மீட்பு நடைமுறையைத் துவங்கலாம். உங்களது கடனை NPA எனக் குறிக்கும் முன்பு, வங்கி உங்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்புகிறது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் தேவையான தொகையை டெபாசிட் செய்தால், உங்களது கடன் NPA ஆக மாறுவதை தவிர்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு
ஒரு EMI-ஐ தவறவிட்டால் கடன்வகை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து உங்களது கிரெடிட் ஸ்கோரை சுமார் 50 புள்ளிகள் குறைக்கலாம். இஎம்ஐயை மீட்டெடுப்பது மற்றும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களது கிரெடிட் ஸ்கோரை படிப்படியாக மேம்படுத்தலாம். எனினும் உங்களது கிரெடிட் ஸ்கோர் அறிக்கை பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களை இன்னும் பிரதிபலிக்கக்கூடும். உங்களது கடன் NPA என வகைப்படுத்தப்பட்டால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்ககூடும்.
நிலுவையிலுள்ள கடன் தொகைக்கு தீர்வு
உங்களது கடன் செயல்படாத சொத்து என அறிவிக்கப்பட்டதும், வட்டி மற்றும் அபராதம் உட்பட முழு நிலுவைத்தொகையையும் திருப்பிச் செலுத்துவதற்கான விருப்பங்களை வங்கி உங்களுக்கு வழங்கலாம் (அல்லது) வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடிசெய்து கடனை திருப்பச்செலுத்த வலியுறுத்தலாம். இது உங்களுக்கு நிதிரீதியாக ஆறுதல் தரும் விஷயமாக தோன்றக்கூடும். ஆனால் அவை உங்களது கடன் பெறும் தகுதியில் மிகப் பெரிய கரும்புள்ளியாக மாறக்கூடும் என்பதனை மறக்காதீர்கள். உங்களுடைய கடன் அறிக்கையில் செட்டில் மெண்ட் குறித்த விபரங்கள் இருப்பின் கடன் வழங்கும் வங்கிகள் புதிய கடன்களை வழங்க விரும்ப மாட்டார்கள்.
EMI செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பது எவ்வாறு..?
எதிர் காலத்தில் கடனை திரும்ப செலுத்துவதில் நிலவும் சிக்கல்களை தீர்க்க, உங்களது கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் முன்பாகவே திட்டமிடுவது எப்போதும் சிறந்தது. உங்களது கடனை NPA ஆக அனுமதிப்பதற்குப் பதில், உங்களது குறைந்த வருமானம் தரும் முதலீடுகளில் சிலவற்றை நீக்குவது ஆகிய விருப்பங்களை ஆராயுங்கள். அத்தகைய நிதிச்சிக்கல்களைச் சமாளிப்பதற்கு வலுவான அவசர நிதியைக் கொண்டிருப்பது பயன் உள்ளதாக இருக்கும்.
சில நேரங்களில் கடன் வழங்குபவர் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல், கடன் மறுசீரமைப்பு ஆகிய சில தளர்வுகளை அனுமதிக்கலாம். ஒரேசமயத்தில் அதிகமான கடன்களை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மற்றொரு கடனைத் திருப்பிச்செலுத்த கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கடன் சார்ந்த மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்ககூடும். அத்துடன் அதில் இருந்து மீள்வது கடினமாக இருக்கலாம். EMI-ஐ திருப்பிசெலுத்துவதில் சிரமமிருந்தால், உங்களது கடன் NPAஆக வகைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க குறைந்தபட்சம் வட்டியை செலுத்த முயற்சி செய்யலாம்.
கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனில் என்ன நடக்கும்?
# ஒரு மாதத்துக்கும் மேலாக EMI-ஐ தாமதப்படுத்தினால், தாமதமான தவணைக்கு 1-2 சதவீத அபராதம் வங்கி விதிக்கலாம்.
# ஒரு EMI-ஐ தவறவிட்டால் கடன் வகை மற்றும் பிறகாரணிகளின் அடிப்படையில் உங்களது கிரெடிட் ஸ்கோரை சுமார் 50 புள்ளிகள் குறைக்கலாம்.
# பின் தங்களால் EMI செலுத்த முடியவில்லை எனில், கடன் NPAஆக மாறுவதைத்தடுப்பதற்கு வட்டி செலுத்த வேண்டும்.
# நிலுவையிலுள்ள கடன் தொகையைத் திருப்பிச்செலுத்த உங்கள் முதலீடுகளில் சிலவற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும்.