திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மக்கள் கடனில் தவிக்கும்போது கடலில் பேனா எதற்கு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் பேசிய அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது என்றார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள மாநிலம் தமிழகம் தான் என ஆய்வுகள் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் திமுகவின் 7 பேர் விடுதலை, நீட் தேர்வு ரத்து அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆச்சு என்று கேள்வியை முன் வைத்தார்.