Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடனால் பறிபோன 2 உயிர்கள்…. போலீசார் தீவிர விசாரணை…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

கடன் கொடுத்த பெண் மற்றும் கடன் பெற்ற நபரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியில் வசித்து வரும் ராஜா என்பவருக்கு காவேரி(35) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். காவிரி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரூற்பட்டியை சேர்ந்த பெயிட்டரான ராஜமாணிக்கம் என்பவருக்கு காவேரி 3 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இதனையடுத்து பலமுறை கடன் தொகையை கேட்டும் ராஜமாணிக்கம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காவேரி வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராஜா நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கடன் வாங்கிய ராஜமாணிக்கம் மரூர்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனையறிந்த காவல்துறையினர் ராஜமாணிக்கத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் கொடுத்த காவேரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த பிரச்சனையில் நாம் மாட்டிகொள்வோம் என்ற அச்சத்தில் ராஜமாணிக்கம் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த 2 சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |