Categories
தேசிய செய்திகள்

“கடந்த 30 ஆண்டுகளாக கிடைத்த வெற்றி”.. ஆனால் இப்போ கிடைக்கல… வாள் கொண்டு மக்களை மிரட்டிய வேட்பாளர்…!!!!!

மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டம் பதூர் தாலுகாவில் காம்ஹிட் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக பல வருடங்களாக பாபுலால் கஞ்கர் என்பவரின் மனைவி செயல்பட்டு வந்தார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் பாபுலாலும் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் பாபுலாலின் சகோதரன் சுரேஷ் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புகளை கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாபுலாலின் மனைவி மற்றும் பாபுலாலின் தம்பி சுரேஷ் ஆகிய இருவரும் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில் 30 வருடங்களாக காம்ஹிட் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த சுரேஷின் குடும்பத்தினர் தற்போது நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தனர். அதனால்  ஆத்திரமடைந்த சுரேஷ் தனது வீட்டில் இருந்த வாளை எடுத்துக் கொண்டு காம்ஹிட் கிராமத்தில் உள்ள மக்களை மிரட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |