தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லரை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. அதில் தினமும் சராசரியாக ரூ 100 கோடிக்கும், வார விடுமுறை தினங்களில் அதைவிட அதிகமாகவும் மது விற்பனை ஆகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை விடுமுறை நாட்களில் மது விற்பனையானது களைகட்டும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 680 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி இருக்கிறது. ஜனவரி 12, 13 தேதிகளில் சென்னை மண்டலத்தில் மட்டும் 70.54 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. மதுக்கடைகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் திட்டமிட்ட அளவை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.