Categories
தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டில்…. இந்தியாவில் இதய, நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகின்றது.

இந்தியாவில் இதய மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மற்ற நோய்களை காட்டிலும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து இருக்கிறது.

மருந்து விற்பனையில் முதல் ஐந்து நோய்களில் இதயக்கோளாறு முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இதயக்கோளாறு சிகிச்சைக்கான மருந்துகள் 21 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல் தொற்று நோய்களுக்கான மருந்து விற்பனை 18 கோடியாகவும், இரைப்பை-குடல் சிகிச்சைக்கான மருந்து விற்பனை 17 கோடியாகவும், நீரழிவு சிகிச்சைக்கான மருந்து விற்பனை 16 கோடியாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |