கடகம் ராசி அன்பர்களே..! இன்று உதிரி வருமானங்கள் பெருகும். உள்ளத்தில் அமைதி கொள்ளுங்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் கூடிய வாய்ப்புகள் இருக்கும். தடைபட்ட கல்யாணம் பேச்சுவார்த்தைகள் நல்ல சிறப்பை கொடுக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சென்றாலும் கொஞ்சம் கடினமாகத்தான் போராட வேண்டியிருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். வெற்றி பெறக் கூடிய சூழலை சரியாக குறைத்துக்கொண்டு புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் உங்களுடைய திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
பொருளாதார நிலையில் கடுமையான நெருக்கடிகளையும் சந்திக்கக்கூடும். உற்றார் உறவினர்களிடையே வீண் விரோதங்கள் கொஞ்சம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும், கவலை வேண்டாம். சோர்வு குறைந்து உற்சாகமாகவே காணப்படுவீர்கள். இன்று மற்றவர்களிடம் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கும் படியாக பேசுவீர்கள். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். கூடுமானவரை இன்று திருமண பேச்சுவார்த்தை நடத்துவது ரொம்ப சிறப்பு நல்ல முடிவு இன்று கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது. பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டையும் முடிந்தால் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், மிகவும் சிறப்பாகவே இருக்கும். தோஷங்கள் அனைத்துமே நீங்க பெரும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் நீல நிறம்