Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.. எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். தொழில்வளர்ச்சி ரொம்ப சிறப்பாகவே இருக்கும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். இன்று வாய்ப்புகள் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். இன்று  ஒரு சில இடங்களில் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கெடுபிடியான சூழ்நிலை உருவாகும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வர வேண்டிய பண தொகைகளை எதிர்பார்த்தபடி வந்து சேரும்.வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கூடுமானவரை கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், தேர்வு முடியும் வரை படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |