புதுக்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டும் அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் கணேஷ் நகர் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஜீவா நகர் பஸ் நிறுத்த பகுதியில் மூன்று பேர் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் விசாரித்தனர்.
இவர்கள் மச்சுவாடியைச் சேர்ந்த 24 வயதுடைய கார்த்திக், வண்டிபேட்டையைச் சேர்ந்த 22 வயதுடைய ரெங்கதுரை, வா.ஊ.சி நகரை சேர்ந்த 20 வயதுடைய பார்த்திபன் என தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்த நிலையில் அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சா, 5410 ரூபாய் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.