Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணையின் விலை தொடர் சரிவு….. பொருளாதார சூழ்நிலையே காரணம்…. நிபுணர்கள் கருத்து…!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து உலக அளவில் அத்யாவசிய பொருள்களின் விலை மற்றும் கச்சா எண்ணெய் போன்றவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஏனெனில் உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது போர் பதற்றம் குறைந்துள்ளதால் விலை சரியத் தொடங்கியுள்ளது.

இன்று சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய்க்கு 10 சென்ட் குறைந்துள்ளது. இந்த விலை குறைவுக்கு காரணம் பொருளாதார சூழ்நிலை சரியில்லாதது தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் பிறகு பணவீக்கம், டிமாண்ட் குறைவு, சர்வதேச பொருளாதார பாதிப்பு போன்ற காரணங்களாலும் விலை குறைந்து வருகிறது. மேலும் சர்வதேச சந்தையில் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது குறையவில்லை.

Categories

Tech |