Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பு….. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணையின் அளவை இந்தியா கிடுகிடுவென உயர்த்தி உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 1,31,506 பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இந்தியா கடல் வழியை இறக்குமதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா கச்சா எண்ணெய் கொள்முதல் அளவில் 3,73,559 பீப்பாயாக ஒன்றிய அரசு உயர்த்தியது. மே மாதத்தில் கடல் வழியே ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி இரண்டு மடங்களுக்கு மேலாக 8,23,361 பேரல்களாக அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகபட்சமாக ஜூன் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து கடல் வழியே இறக்குமதி கச்சா எண்ணெய் அளவு 11,83,994 பேரலாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. எனவே கடந்த 5 மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட கச்சா எண்ணெயின் அளவு 11 லட்சம் பேரல்களை தாண்டி உள்ள நிலையில் நடப்பு மாதத்தில் இது இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கடல் வழியே அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் அளவை இந்தியா கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைத்து வருகிறது.

Categories

Tech |