Categories
தேசிய செய்திகள்

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள்….. பீதியடைந்த மக்கள்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிப்பதற்கு இடமில்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒருசில மாநிலங்களில் ஆங்காங்கே சடலங்கள் வீசப்பட்டு செல்வது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பீகாரின் பக்சார் மாவட்டத்தில் ஓடும் கங்கை நதியில் 150க்கும் மேற்பட்ட சடலங்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தில் உடல்களை உறவினர்கள் நதியில் வீசி விட்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |