ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் இஸ்ரோவின் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் என தகவல் வெளியாகியுள்ளது.
குன்னூர், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வரும் இஸ்ரோவின் சுகன்யா திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மூன்று வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதற்கட்ட பயிற்சியில் வருண் சிங் பங்கேற்றிருந்தார்.
குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று நடந்த விபத்தில்வருண் சிங் மட்டுமே உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.