Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கோஸ்ட்” சன்னி லியோனை புகழ்ந்த சதிஷ்…. புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு….!!

நடிகை சன்னி லியோன் இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழியில் அதிக படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால் சன்னி லியோன் படங்களில் நடிப்பதற்கு ஏற்கனவே ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சன்னி லியோன் தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் காமெடி நடிகரான சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பின்  போது சதீஷ் சன்னி லியோனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சதீஷ் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “சன்னி லியோன் மிகவும் இனிமையானவர், சிறந்த நடிகை, அற்புதமான டான்சர், மனித நேயம் மிக்கவர் மற்றும் அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |