“ஓ மை கடவுளே ” திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் ரித்திகா சிங், அசோக் செல்வன், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை வாணி போஜன், அசோக் செல்வனிடம் செல்போன் நம்பர் பரிமாறிக் கொள்ளுவது போன்று ஒரு போல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
அந்த காட்சியில் நடிகை வாணி போஜன் கூறும் செல்போன் நம்பர் தன்னுடையது என்றும், அதை அத்துமீறி பயன்படுத்தியதாகவும், இதனால் இத்திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் பேசினார். அப்போது நடிகை வாணி போஜனின் ரசிகர்கள் தினமும் தனக்கு போன் செய்து தொல்லை தருவதாகவும் இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறினார்.