தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கௌதம் மேனன் பேசும் போது படத்தில் இடம்பிடித்து ஹிட் அடித்த மல்லிகைப்பூ பாடல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், மல்லிகைப்பூ.. பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் இந்த பாடல் எங்களின் கதை களத்திலேயே இல்லை. ஏ.ஆர்.ரகுமான் சார் தான், இப்போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களின் உறவுகளுடன் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். அதே போன்றதொரு காட்சி தான் இந்த படத்தில் வருகிறது. அதை ஏன் நாம் பாடலாக பண்ணக்கூடாது என்று கேட்டு, அதுக்கு அப்புறம் தான் மல்லிகை பூ பாடல் உருவானது. இந்த பாடல் இன்று இவ்வளவு பெரிய ஹிட்ட அடிக்க ஒரே காரணம் ஏ.ஆர். ரகுமான் தான் என்று தெரிவித்துள்ளார்.