Categories
மாநில செய்திகள்

ஓ இவர்தான் மோசடி மன்னனா?…. 15 1/2 கோடி மோசடி செய்த நபர்…. போலீஸ் கமிஷனர் அளித்த பேட்டி….!!!!

மோசடி செய்த  நபரை காவல்துறையினர் குண்டர்   சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தில் மோசடி மன்னன்   பி. எம்.  ரெட்டி என்ற  முத்துக்கிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் என்ஜினியரிங் கல்லூரி மேம்பாட்டுக்காக 200 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 15 1/2 கோடி ரூபாய்  மோசடி செய்துள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி மன்னன் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதனையடுத்து நேற்று காவல்துறையினர் முத்துகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஒரு ஆண்டு சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று நிபுணர்களிடம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் முத்துக்கிருஷ்ணனின் பினாமி பெயரில் வாங்கி வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகள், 15 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டது. மேலும் இவரது  கூட்டாளிகள் பெயரில் உள்ள 15 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |