Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. திமுகவில் இணைந்த செல்வராஜ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல கட்சியில்  இணைந்த  செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தில் அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சைகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதனால் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என 2  பிரிவாக பிரிந்தது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து செல்வராஜ் அறிக்கை ஒன்றை  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது  “நமது தமிழ்நாட்டில் திராவிட பாரம்பரியமாக திமுக, அதிமுக என 2  கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆட்சி சுனாமி போல் வந்து தமிழ்நாட்டு மக்களை தாக்கியது. அப்போது நானும் அவர்களுடன் இருந்துள்ளேன்.. அதற்காக நான் தினமும் இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறேன். தற்போது திராவிட பாரம்பரியத்தில் நீடிக்கவே திமுகவில் இணைந்துள்ளேன். மேலும் நமது தமிழ்நாட்டு மக்கள் என்றும் மதவாத இயக்கத்திற்கு துணை போக மாட்டார்கள். இதனால் நமது தமிழ்நாட்டில் மதவாத இயக்கம் ஆட்சிக்கு வந்து விடுமோ என்கின்ற பயம் தேவையில்லை. மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்”என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |