மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திடீரென அதிகாரிகளை திட்டி விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் பருவ கால காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வந்தார். ஆனால் 50 செவிலியர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.