செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, இன்றைக்கு நடைமுறையில் பொருளாதார வீக்கம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதேபோல விலைவாசியை பற்றி விவாதிக்க வேண்டிய இடம் பாராளுமன்றம், பாராளுமன்றத்திற்கு போகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்.
மாண்புமிகு நிதி அமைச்சர் விவாதிக்கப்பட வேண்டிய இடமும் அதுதான், விவாதிக்க வேண்டிய விஷயத்தை அங்கே ஆணித்தரமாக மக்கள் தரப்பில் பிரதிபலிக்கின்ற இடம் பாராளுமன்றம். ஆனால் ஒரு நாள் கூட ஒழுங்காக, ஒழுக்கமாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதைத்தான் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொன்னார், நிதி அமைச்சர் என்ற முறையிலே பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டிய இடத்தில் கேட்பது கூட பாராளுமன்ற கூட்டத்தில் இருக்கவில்லை.
எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள்…. குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள் ,தமிழகத்தை சேர்ந்தவர்கள் நான் சொல்லுகின்ற பதிலை கேட்பதற்கு கூட பொறுமையாக இல்லாமல் பாராளுமன்றத்தை வெளிநடப்பு செய்கிறார்கள், அப்போது நாங்கள் சொல்லுகின்ற பதில் எப்படி தெரியும்? விலைவாசி உயர்வு என்று சொல்கிறார்கள்… பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது..
குறிப்பாக நிதி அமைச்சருக்கு உள்ளது, அந்த நிதி அமைச்சர் விளக்கமும், பதிலும் சொல்லும் போது அந்த பதிலை கேட்டுக் கொண்டு விவாதித்தால் சரியாக இருக்கும். அதை கூட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துரைமுருகனிடம் கேட்கும் போது, அவர்கள் சொல்வது தான் கேட்க வேண்டுமா ? நாங்கள் சொல்வதை கேட்கக் கூடாதா என்று விதண்டாவதமாக கேட்கிறார்.
குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம், பல்வேறு பிரச்சினைகளை, மதுவிலக்கு சம்பந்தமான பிரச்சனையில், மது உற்பத்தி ஆலைகள் யார் வசம் இருக்கிறது ? என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னவுடன் விளக்கமாக பதில் சொன்னவுடன், உடனே வெளியேறுகிறார்கள், என்றால்… இவர்களுக்கு மடியில் கனம் இருக்கிறது. உடனே பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்கள் என விமர்சித்தார்.