நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர காதல் ஜோடியாக இந்த தம்பதிகள் வலம் வந்தனர். இவர்களுடைய திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து இந்த தம்பதி இருவரும் ஜாலியாக ஹனிமூன் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வலிமை படம் குறித்து பேசி சர்ச்சை கிளப்பி சிம்புவை காதலிப்பதாக கூறி அவருடைய வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை ஸ்ரீநிதி விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் குறித்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. எனக்கு நயன்தாரா அக்காவை ரொம்ப பிடிக்கும். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. தமிழ் பையன் அதனால் நயன்தாரா தான் லக்கி என்று கூறியுள்ளார். ஸ்ரீநிதி இந்த பேட்டி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.