Categories
மாநில செய்திகள்

ஓலா, ஊபர் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்ஸி போக்குவரத்து சேவை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் போன்ற சிரமங்களுக்கு இவை தீர்வாக உள்ளன. இருந்தாலும் இந்த டாக்ஸி போக்குவரத்து சேவையிலும் பல பிரச்சனைகள் உள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் கேட்பது, திடீரென ட்ரிப் கேன்சல் செய்வது,பயணிகளை தரைக்குறைவாக பேசுவது மற்றும் மிக வேகமாக ஓட்டுவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பயணிகளின் முன்பதிவு நிராகரிக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது .அதன்படி ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் இனி உங்களின் முன்பதிவு ரத்து செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் முன்பதிவு ரத்து செய்யும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆட்டோவுக்கு ஐம்பது ரூபாய் அபராதமும், காருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பான புகார்களை தெரிவிக்க 18004255430 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது www.tnsta.gov.in என்ற இணைய முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |