ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.. தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள்.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு, மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.. அதில், ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!
ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!
— Kamal Haasan (@ikamalhaasan) September 12, 2021