Categories
உலக செய்திகள்

ஓரே மாதத்தில் 4 முறை திருமணம்… வங்கி ஊழியரின் வினோதமான செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…

விடுமுறையுடன் கூடிய சம்பளத்திற்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து கொண்ட வாங்கி ஊழியர்.

தைவானில் வங்கியில் பணிபுரியும் கிளார்க் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை விடுமுறை எடுத்துள்ளார். பின்பு விடுமுறை தினம் முடிவுக்கு வந்ததும் உடனடியாக அந்த பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து வங்கியில் திருமணம் செய்து கொள்வதாக விடுமுறை எடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் அதே பெண்ணை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டு ஏப்ரல் 28ஆம் தேதி அதே பெண்ணை விவாகரத்து செய்து உடனடியாக ஏப்ரல் 29ஆம் தேதி 3ஆம் முறையாக அதே பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவர் மே 11ஆம் தேதி மீண்டும் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து மே 12ஆம் தேதி 4ஆம்  முறையாக அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வங்கி நிர்வாகம் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்த போது சம்பளத்துடன் விடுமுறை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரிவந்துள்ளது. இதனை அறிந்த நிர்வாகம் முதல் திருமணத்திற்கான விடுமுறைக்கு மட்டுமே சம்பளம் குடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.

இதனை எதிர்த்து வங்கியில் பணிபுரியும் கிளார்க் தொழிலாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து  தொழிலாளர் பணியகத்தின் ஆணையர் வங்கி ஊழியர் செய்தது நியாயமற்றது என்று கூறியுள்ளார். ஆனாலும் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்க கூடாது என தொழிலாளர் சட்டத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |