ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன் என இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகிறது. அந்த மர்மம் குறித்து விசாரணை நடைபெறுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கி இருக்கிறது. இடையில் சில நாட்களாக விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில்ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பேரில் தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. முன்பே ஜெயலலிதா மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்திருக்கிறது. அவர்கள் அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்ய பட்டிருக்கிறது. சசிகலா தரப்பினர் கேட்டுக் கொண்டதன் பேரில் பல மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் ஆஜராகுமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உறவினர் இளவரசி போன்றோருக்கு ஆறுமுக ஆணையம் அழைப்பானை விடுத்திருக்கிறது.
இந்நிலையில் அதனை ஏற்று இளவரசி இன்று காலை10.12 மணிக்கு ஆறுமுகசாமி அலுவலகத்திற்கு வந்தார். அவர் ஆணைய விசாரணை முன்பு நேரில் ஆஜராகி இருக்கிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசி தரப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர் பதில் அளித்த அவரது பதில்களை வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார். அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் சசிகலா மட்டுமே உடன்இருந்து பார்த்துத்துள்ளார்.
நான் 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்தேன். ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் என இளவரசி வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அடுத்த கட்டமாக இளவரசியிடம் குறுக்கு விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. முக்கிய பிரமுகர்கள் வாக்குமூலம் அளிப்பதற்காக ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது.