Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்ற நபர்…. சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்ற ரயில்வே ஊழியருக்கு நீதிபதி 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ரயில்வே காலனியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு பரமேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்து சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். அதற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என பரமேஸ்வரன் மிரட்டியுள்ளார். ஆனால் வீட்டிற்கு சென்ற மாணவன் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பழனி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரமேஸ்வரனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |