பிரிட்டானியாவில் ஓரினச்சேர்க்கை தம்பதிக்கு ஒரு நபர் உயிரணு தானம் செய்துள்ளார்.
பிரிட்டானியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்த இரு பெண்களுக்கு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கான உயிரணு தானத்தை ஒருவர் வழங்கியுள்ளார். செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக அவர் குழந்தைகளை சென்று பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த இரண்டு பெண்களும் பிரிந்துவிட்ட நிலையில், ஒரு பெண் மட்டும் அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் உயிரணு தானம் செய்த அந்த நபர் குழந்தையை சென்று பார்ப்பதற்கு பெண்ணின் தாய் மறுத்துள்ளார்.
அவரின் அந்த செயல் அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்தப் பெண்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு சக பெற்றோரை தேடுகிறார்கள் என்று தான் நம்பியதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு ஆறு வயதாகும் வரை குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்கு தன்னை அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வழக்கை விசாரணை செய்த நீதிபதி அவரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அந்தக் குழந்தையை சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி அளித்தாள், அவளது வாழ்வில் அதிக இடம் தேட அவர் விரும்புவார் என்றும், அது அவளுடைய நலனைப் பெரிதும் பாதிக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
அதே சமயத்தில், அவரும் அந்த சிறுமியும் கடிதங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். பின்வரும் நாட்களில் அந்த சிறுமி அவரை சந்திக்க விருப்பம் கொண்டாள், அந்த சிறுமியின் சட்டபூர்வ பெற்றோர்களான அந்தப் பெண்கள் அவரின் கோரிக்கையை நிராகரிக்க வாய்ப்புள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.