ஆணாக மாறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டு தருமாறு ஒருவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை மாற்றி ஆணாக மாறினார். இந்நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய ஒரு இளம் பெண்ணும் காதலித்தோம். கடந்த 7-ஆம் தேதி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு அமைதியான முறையில் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எனது மனைவியின் குடும்பத்தினர் திடீரென எங்கள் வீட்டிற்குள் நுழைந்து என்னை தாக்கி விட்டு என் மனைவியை கடத்தி சென்று விட்டனர். என் மனைவியை மீட்டு தர கோரி நான் காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்து விட்டேன்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் என் மனைவியை அவரது உறவினர்கள் ஓரினஈர்ப்பை, விட்டுவிடுமாறு கூறி அவருக்கு தகாத மருத்துவ சிகிச்சைகள் அளித்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே ஐகோர்ட் ஓரினசேர்க்கையாளரிடம் பாகுபாடு காட்ட கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனவே என் மனைவியை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள் மனுதாரரின் மனைவி 21 வயது நிரம்பியவர் என்பதால் அவரை சொந்த விருப்பப்படி வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.