Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வை அறிவித்த கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்.!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ராஜட் பாட்டியா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உடைய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆக திகழ்ந்து வந்தவர் ராஜத் பாட்டியா. அவர் 1999 ஆம் ஆண்டின் முதல் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு, உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநில அணிகளுக்காக ரஞ்சி கோப்பை தொடர்களில் பங்கேற்று இருக்கின்றார். சென்ற 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். பின்னர் 2012 ஆம் ஆண்டு அந்த அணி கோப்பையை வெல்வதற்கு பாட்டியா மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

தற்போது வரை 165 முதல் தர போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் 137 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதுமட்டுமன்றி 95 ஐபிஎல் டி20 போட்டிகளில் பங்கு பெற்று 345 கண்களையும் மற்றும் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலமாக பல்வேறு உள்ளூர் போட்டிகளில் மிகவும் சிறந்து விளங்கி வந்த ராஜட் பாட்டியா, நேற்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
.

Categories

Tech |