பெண்ணிடமிருந்து நூதன முறையில் தங்க சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் மெயின் ரோட்டில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயா தனது வீட்டில் தனியாக இருந்த போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பிறகு உங்கள் கணவரின் ஓய்வுதியம் வாங்குவதற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், ஆதார் அட்டையை எடுத்து வாருங்கள் எனவும் அந்த மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் புகைப்படம் எடுக்கும் போது கழுத்தில் தங்க சங்கிலி எதுவும் இருக்க கூடாது என அந்த மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய ஜெயா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கட்டிலில் வைத்துவிட்டு ஆதார் அட்டையை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது 2 மர்ம நபர்களும் கட்டிலில் இருந்த தங்க சங்கிலியை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜெயா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.