பெரம்பலூர் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பெரம்பலூரில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் நலவாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நலவாரிய மனுக்களை அமைக்க ஆன்லைன் முறையில் அனுமதிக்க வேண்டுமெனவும் நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான தீர்ப்பு மனுக்களை பரிசீரிக்கப்பட்டு தாமதம் இன்றிய அனைத்து பணப்பயன்களை வழங்க வேண்டும் எனவும் ஓய்வுதம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் மாத ஓய்வு ஊதியத்தை மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.