ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 2000 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரே பதவி ஒரே பென்ஷன் என்ற திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி ராணுவ வீரர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை ஓய்வூதிய பணத்தை அதிகரிக்கும் அரசின் திட்டத்திற்கு அனுமதி அளித்தார்.
இதனால்தான் தற்போது நிலுவையில் இருக்கும் பென்சன் தொகையை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஓய்வூதியமானது அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணையும் வீரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணமானது அடுத்த சில வாரங்களுக்குள் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.