ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நான்கு வருடங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் போன்றவற்றுக்கான புதிய காப்பீட்டு திட்டம் வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த திட்டத்தை மேலும் நான்கு வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது இருக்கின்றது.
மேலும் இதற்கான தகுந்த பொதுத்துறை நிறுவனமானது ஒப்பந்தப்புள்ளிகள் கோரல் அடிப்படையில் இறுதி செய்யப்படும். இந்த நிலையில் நான்காண்டுகளில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ரூபாய் 4 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. புற்றுநோய், கணையம் உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவருக்கு மருத்துவ உதவி தொகையின் அளவு 10 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் வரையில் மருத்துவ உதவி தொகையும் கிடைக்கும். ஓய்வூதியதாரர்கள் சார்ந்து இருக்கும் நபர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருகின்றனர்.
மேலும் காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திர தொகையானது ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்த நிலையில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் மருத்துவமனைகள் தொடர்ந்து புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் உள்ளது. எனவே தேவைப்படும் பட்சத்தில் பரிந்துரைகளின் அடிப்படையில் கூடுதல் மருத்துவமனைகள் சேர்க்கப்படுகிறது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோருக்கும் இது பொருந்துகின்றது. இதுபற்றி இதர வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.