Categories
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற பஸ் ஊழியர்கள்…. வெறுங்கையோடு சென்ற அவலம்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை பெறாமல் திரும்பினர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 58 வயதுடன் 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற வேண்டியோர் கொரோனா பரவல், நிதிப்பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இரண்டாண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டனர். அவ்வாறு 1,000-க்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதிய பலனாக 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்து இருக்க வேண்டும்.

எனினும் எந்த பண பலனும் வழங்கப்படவில்லை. அத்துடன் பணி நிறைவு விழா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இல்லை. இதற்கிடையில் மேலாண் இயக்குனர் அலுவலகங்களுக்குச் சென்று ஓய்வு பெற்றதற்கான சான்றிதழை மட்டும் பெற்றுச் சென்றனர். இதனால் அவர்களில் பலர் மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டனர்.

Categories

Tech |