பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டியின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து செய்தி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டி காலமானார். தற்போது இவருக்கு 87 வயதாகிறது.இவர் 1984-ஆம் ஆண்டு ஆந்திராவின் ஹனுமகொண்டா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவை தோல்வியுறச் செய்து முதல்முறையாக எம்பி ஆனார். அத்தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். ஜங்கா ரெட்டி மறைவிற்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர், மற்றும் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த இரங்கல் செய்தியில் பிரதமர், “ஸ்ரீ சி ஜங்கா ரெட்டி தனது வாழ்க்கை பொதுச் சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். ஜன சங்கம் மற்றும் பாஜகவை ஆட்சியில் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் அவர் ஒரு அங்கமாக இருந்தார். பலரது மனங்களில் இடம் பிடித்தார். அவர் பல காரியகர்த்தாக்களையும் ஊக்கப்படுத்தினார் அவரது மறைவு வருத்தமளிக்கிறது. கட்சியின் பாதையில் மிக முக்கியமான கட்டத்தில் பாஜகவிற்கு திறம்பட குரல் கொடுத்தார். அன்னாரது மகனிடம் பேசி ஆறுதல் கூறினேன். ஓம்சாந்தி” என்று சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.