Categories
உலக செய்திகள்

ஓமனில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 140 பேர் பாதிப்பு…!!!

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமன் சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,226 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77,812 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்த பலி எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உடல் நலக்குறைவால் 150 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமனில் குணமடைந்தவர்களின் சதவீதம் 93.5 ஆக இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |