மத்திய பல்கலைக்கழகங்களில் ஒபிசிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் வரை காலியாக இருப்பதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் காலியாக இருப்பதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ் சி பிரிவினருக்கான இடங்களின் 38. 71 சதவீதமும், எஸ் டி பிரிவில் 41.64 காலி பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஓபிசி பிரிவினருக்கு 55% காலியிடங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் உள்ள இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வழிகாட்டுதல் தயாராக இருப்பதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.