கடந்த 2019-ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் அவகாசம் கோரப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த மனு தொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணையை வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் கூறியுள்ளார்.