Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகனுக்காக கோடி கோடிகளாக புரண்ட பணம்…வெளிவந்த பகீர் தகவல்…!!!

எம்.பி தேர்தலில் ஓபிஎஸ் தனது மகனை ஜெயிக்க வைக்க 850 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காக அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் களப்பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.இந்நிலையில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை இணையவழி மூலம் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. தேனி அருகே  கொடுவிலார்பட்டி இணையவழி உறுப்பினர் சேர்க்கையில்  கலந்துகொண்ட தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புதிய குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.

அதிமுக அரசு மிகவும் ஊழல் மிகுந்த அரசெனவும் ,வருகின்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது எனவும் ,திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி மலரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த எம்பி தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தனது மகனை ஜெயிக்க வைக்க ரூபாய் 850 கோடி செலவு செய்ததாகவும் அவர் புதிய குற்றச்சாட்டினை வைத்துள்ளார். அதேபோன்று வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை கோடிகள் செலவழித்தாலும் அதிமுக கண்டிப்பாக ஜெயிக்காது என உறுதியாக கூறியுள்ளார்.

Categories

Tech |