புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைதியில் இருந்து சாதி, மத ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களை கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே புகுந்து அடித்து, உடைத்து அங்கிருந்து சொத்து பத்திரங்கள், விலைமதிப்பில்லா பொருட்களை திருட்டி சென்றார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடந்த விசாரணையில் திருடப்பட்ட 112 பொருட்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சிபி சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் திருட்டு புகாருக்கு ஆளான ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என யாரையும் தமிழக காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை.
இதன் மூலம் திமுகவின் சதி செயல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. கழகத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலில் அரங்கில் இருந்து காணாமல் போவார்கள். கழகத்தில் இருந்து கொண்டே துரோகம் செய்யும் துரோகிகளை கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி யார் துவேஷம் செய்வார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக பெட்ரோல் கொண்டு வீச்சால் ஒட்டுமொத்த இந்தியா தேசமும் தமிழகத்தை உற்று நோக்கும் நிலை ஸ்டாலின் உருவாக்கி விட்டார். காரைக்காலில் ஒரு வாரத்திற்கு முன்பு தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் யார் தவறு செய்தாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது காவல்துறையினர் கடமையாகும். எனவே புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிரவாத செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கண்காணிக்க காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்று உருவாக்க வேண்டாம். அது டிஜிபி தலைமையில் இயங்க வேண்டும். இது சம்பந்தமாக துணை நிலை ஆளுநரும், முதலமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நமது மாநிலத்தில் அமைதியை கெடுக்கும் எந்த சக்திக்கும் சிறிதளவு இடம் கொடுக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.