சசிகலா விவகாரம் குறித்து ஓபிஎஸ் சொன்ன கருத்துக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு இபிஎஸ் ஆதரவாளர்களான ஜெயக்குமார், கேபி. முனுசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா , அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் சுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதுபற்றி மதுரை சென்றிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர், அதற்கு அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் பதிலளித்தார். ஆனால் ஓபிஎஸ் இன் இந்தக் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் கேபி. முனுசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.