Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓபனரை எச்சரித்த தோனி…. ரெடியாகயிருக்கும் சேனாபதி…. “ஏப்ரல் 9 ல்” நடக்கப்போவது என்ன?….!!

சிஎஸ்கே அணியின் மீட்டிங்கின் போது ருதுராஜ்ஜின் மீது தோனி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் 15 ஆவது சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா வகிக்கிறார். இந்நிலையில் கொல்கத்தா, லக்னோ அணிகளிடம் விளையாடிய சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே படு மோசமாக விளையாடி தோல்வியடைந்துள்ளது. இந்த பின்னடைவுக்கு முதல் போட்டிகளில் மொயின் அலி இல்லாதது, பவுலிங்கில் தீபக் சஹர் இல்லாதது, XI அணியில் ராஜ்வர்தன் இல்லாதது போன்ற பல பிரச்சினைகள் காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓபனர் ருதுராஜ் பெரிய அளவில் சொதப்புவது தான் 3 போட்டிகளின் தோல்விக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் சிஎஸ்கே அணியின் மீட்டிங்கின் போது தோனி ருதுராஜ்ஜிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தோனி அவருக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதாவது வருகின்ற 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் ருதுராஜ் சொதப்பினால் அவர் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறியுள்ளார். அவ்வாறு ருதுராஜ் அணியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் ஒடிசாவை சேர்ந்த சேனாபதிக்கு தான் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

Categories

Tech |