Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஓனர் இருக்கும்போதே தில்லா இப்படி செஞ்சிருக்காங்க…. காவல்துறையினர் விசாரணை…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் ரயில்வே ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிபுரத்தில் ரயில்வே ஊழியரான துரையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டினுடைய பின்புற கதவை உடைத்து பீரோவிலிருந்த 60 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அவர் எழுந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் பாலுசெட்டிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |