Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் உரிமம்…. விண்ணப்ப படிவத்தில் மாற்றம்…. மத்திய அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்….!!

ஓட்டுனர் உரிமம் பெற நிரப்ப வேண்டிய விண்ணப்ப படிவத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வருவோருக்கு நெடுஞ்சாலைத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019 ஆண்டைப் பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை 12246 ஆக உயர்ந்துள்ளது.

அதை ஊக்குவிக்கும் விதமாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வரும் நபர் தன்னுடைய உடல் உறுப்பு தானம் செய்யலாம் என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு நபர் அந்த தேர்வை உறுதி செய்திருந்தால் ஒருவேளை அந்த நபர் சாலை விபத்தில் உயிரிழக்க நேரிடும் போது அவரது உடல் உறுப்புகள் தானமாக பெற்றுக் கொள்ளப்படும்.

Categories

Tech |