Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் ஒருவரின்…. உணவை பறித்த அதிகாரிகள்… கொந்தளிக்க வைக்கும் வீடியோ…!!

பிரெக்ஸிட் காரணமாக ஓட்டுநர் ஒருவரின் உணவை அதிகாரிகள் பறிக்கும் ஒரு வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் பிரக்சிட்டுக்காக பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் போராடினர். தற்போது இவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் தினசரி வேலைக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு தான் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரெக்சிட்டினால் அடிப்படை தொழிலாளர்கள் மிகவும் கடுப்படைந்து வருகின்றனர். மேலும் தற்போது வெளியான ஒரு வீடியோவை இதற்கு உதாரணமாக கூறலாம். அதாவது அந்த வீடியோவில் ஓட்டுனர் ஒருவரிடம் நெதர்லாந்து காவல் துறையினர் பிரக்சிட் குறித்து கேலி செய்கின்றனர். மேலும் அவரின் மதிய உணவிலும் கை வைக்கின்றனர்.

இதனை ஒன்றும் செய்ய முடியாமல் அவர் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் மேல்மட்டத்தில் உள்ள மக்கள் புதிதாக விமானத்தில் கொண்டு வரப்படும் லெட்டூசை கொண்டு அவர்களின் உணவு வகைகளில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தங்களின் வீடுகளில் பாதுகாப்பாக உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த உணவுப் பொருட்களை மக்களுக்காக கொண்டுவரும் ஓட்டுநர்கள் தான் வயிற்றில் அடிக்கப்படுகிறார்கள் என்பது வேதனையடைய செய்துள்ளது.

மேலும் அந்த வீடியோவில் நெதர்லாந்தினுள் நுழையும் ஓட்டுனர் ஒருவரின் சான்விட்சை எல்லை அதிகாரிகளில் ஒருவர் சோதிக்கிறார். அதில் இறைச்சி இருக்கவே அதனை அவர் பறிமுதல் செய்கிறார். மேலும் அந்த ஓட்டுனர், பரிதாபமாக இறைச்சியை எடுத்துக்கொண்டு பிரட்டை மட்டும் தருவீர்களா? என்று கேட்கிறார். அதற்கு அந்த அதிகாரிகள் இல்லை அனைத்தையும் பறிமுதல் செய்து விடுவோம் என்று கூறுகின்றனர். மேலும் அதில் ஒரு அதிகாரி “பிரெக்ஸிட்டிற்கு உங்களை வரவேற்கிறோம் சார்” என்று அவரை நக்கல் செய்கிறார்.

அதற்கு மற்ற அதிகாரிகளும் நக்கலாக சிரிக்கிறார்கள். அதாவது பிரக்சிட்டிற்கு பின்பு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சி போன்றவை பிரிட்டனிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாதாம். எனவே எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம் என்று கூறி அவரின் உணவில் அதிகாரிகள் கையை வைத்துள்ளார்கள். இதனைக்கண்ட கடுமையாக கொந்தளித்துள்ளனர்.

மேலும் இந்த பிரேக்சிட்டின் காரணமாக வேறு என்னென்ன பிரச்சினைகள் உண்டாக போகிறதோ? என்று தெரியவில்லை. இதற்கு உதாரணமாக இயக்குனர் விசு அவர்களின் திரைப்படத்தில், மகன் வீட்டின் நடுவில் கோடு போட்டு வீட்டை இரண்டாக பிரித்துவிடுவார். அதன் பின்பு பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் இவ்வாறு நடக்கும் என்று தெரிந்திருந்தால் வீட்டில் கோடு போட்டு இருக்க மாட்டாய் அல்லவா? என்று தந்தை கேட்பார். பிரெக்ஸிட்டால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கும்போது அந்த கதைதான் ஞாபகம் வருகிறது.

Categories

Tech |