Categories
மாநில செய்திகள்

ஓட்டம் பிடித்த பிரபல நடிகை…. விரட்டும் தமிழக போலீஸ்…..!!!!

நான் ஒரு சூப்பர் மாடல் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார்.

அதனால் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு  பதிந்ததால் கைதுக்கு பயந்து மீராமிதுன் ஓட்டம் பிடித்துள்ளார். இதை மோப்பம் பிடித்த போலீசார் மீராவை கைது செய்ய விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |