உத்தரபிரதேசத்தில் ரயிலில் 4 பேர் தொழுகை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் பரவியதை அடுத்து பொது இடங்களில் தொழுகை நடத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநில காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Police is looking for these four Muslims who were offering namaz in side a standing train in UP, India. Offering namaz has become a crime in ‘secular’ India. pic.twitter.com/0TJXrvst7S
— Ashok Swain (@ashoswai) October 22, 2022
குஷிநகரின் முன்னாள் பா.ஜ.க எம்எல்ஏ தீப்லால் பாரதி பகிர்ந்துள்ள இவ்வீடியோவில், சத்தியாகிரக விரைவு ரயிலில் கட்டா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போது, ஸ்லீப்பர் பெட்டியில் நடந்துசெல்லும் இடைவெளியில் 4 முஸ்லீம் ஆண்கள் தொழுகை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தொழுகை செய்தவர்களுக்கு அருகிலிருந்த ஒருவர் பயணிகளை தொழுகை முடியும் வரை காத்திருக்க சொல்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதன் வீடியோ வைரலானதை அடுத்து பொது இடங்களில் தொழுகை செய்வது பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.