Categories
மாநில செய்திகள்

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு….!!! பயிற்சி டிஎஸ்பி கைது….!!!

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஏப்ரல் 1ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்ற பொதிகை விரைவு ரயிலில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். ரயில் நள்ளிரவு 12.30 மணியளவில் விருதாச்சலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அமர்ந்திருந்த பயணி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த பெண் எஸ்ஒஎஸ் காவலன் செயலி மூலமாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெட்டியில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்த டி.எஸ் அண்ணாதுரை மற்றும் காவலர்கள் இணைந்து அந்த பெண்ணை மற்றொரு பெட்டிக்கு மாற்றி அவரது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தனர். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் திருச்சி மாவட்டத்திலுள்ள காவலர் பயிற்சி அகாடமியில் பயின்று வரும் டிஎஸ்பி மகேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவரிடம் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |