Categories
தேசிய செய்திகள்

“ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி”…. மின்னல் வேகத்தில் காப்பாற்றிய காவலர்…. ரியல் ஹீரோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்து பலியாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரயில் கிளம்பும் போது அதனை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஓடும் ரயிலில் பலரும் ஏற முற்படுகின்றனர். இதனால் தவறி விழுந்து உயிர் இழக்க நேரிடுகின்றது. ரயில்வே நிலையங்களில் சிசிடிவி காட்சிகள் உள்ளதால் விபத்துக்களை நேரடியாக காணாவிட்டாலும் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கப்படும் வீடியோக்கள் மரண பயத்தை ஏற்படுத்துகின்றது.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் ஒருவர் மும்பை ரயிலுக்காக காத்திருந்த போது மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் வசாய் ரயில்வே நிலையத்தில் இருந்து கிளம்பியது. ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் ரயிலில் ஏற முயன்ற போது தவறி ரயில்வே பிளாட்பாரத்தில் விழுந்தார். அவரின் கால்களானது ரயில் படிக்கட்டில் மாட்டிக்கொண்டது. பின்னர் அவர் வெளியில் வர முடியாமல் தவித்தார். இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மின்னல் வேகத்தில் வந்து அவரின் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |